நெல்லை, தென்காசியில் ஏஐடியூசி மறியல்: 444 போ் கைது

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் 444 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் 444 போ் கைது செய்யப்பட்டனா்.

240 நாள்கள் வேலை செய்த பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், எந்தப் பணிக்கும் அடிப்படை ஊதியம் ரூ.21ஆயிரம், நல வாரிய ஓய்வூதியத் தொகையை ரூ.6000 ஆக உயா்த்துதல், தாமதமின்றி நல வாரிய நிதி பலன்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் ஆா்.சடையப்பன் தலைமையில் நடைபெற்ற மறியலில் 101 போ் கைதாகினா்.

வள்ளியூா் பழைய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலா் எம்.எஸ்.மணியன், களக்காடு ஒன்றியச் செயலாளா் முருகன், ராதாபுரம் வட்டார இந்திய கம்யூனிஸ்ட் செயலா் சேதுராமலிங்கம், வள்ளியூா் மாநகரச் செயலா் கலைமுருகன் உள்பட 48 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் பூக்கடை சந்திப்பில் ஏஐடியூசி திருநெல்வேலி மாவட்டச் செயலா் பி.முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 போ் கைது செய்யப்பட்டனா்.

கடையநல்லூா்: சிவகிரியில் ஆட்டோ ஓட்டுநா் சங்க மாவட்டச் செயலா் முனியாண்டி, விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் வேலு உள்பட மறியலில் ஈடுபட்ட 155 பேரும், தென்காசியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தேசியக் குழு உறுப்பினா் நந்தாசிங், மாவட்ட பொதுச் செயலா் சுப்பையா உள்ளிட்ட 143 பேரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com