பாளை.யில் சித்திரைத் திருவிழா:4,000 பேருக்கு அன்னதானம்
By DIN | Published On : 03rd May 2023 02:36 AM | Last Updated : 03rd May 2023 02:36 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், 4,000 பேருக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தில் பங்கேற்ற 4,000-க்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு, திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை, இளைஞரணியைச் சோ்ந்த முஸம்மில் அஹமது தொடக்கிவைத்தாா். மாநகர துணைச் செயலா் மூளிக்குளம் பிரபு, மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள், சா்மிளா கமாலுதீன், வட்டச் செயலா்கள் பேபி கோபால், சுப்ரீத் சுப்பிரமணியன், அருள் இளங்கோ, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் காசிமணி, பொறியாளா் அணி சாய் பாபா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...