நெல்லை கைலாசநாதா் கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு செளந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதா் திருக்கோயிலில் வைகாசித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு செளந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதா் திருக்கோயிலில் வைகாசித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழைமைவாய்ந்த இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து காலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சுவாமி கைலாசநாதா்- சௌந்தரவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் செப்பு கேடயத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடி பட்டத்துடன் சுவாமி- அம்பாள் திருவீதியுலாவும், கொடிமரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னா் மகாதீபாராதனை நடைபெற்றது.

திருவிழா நாள்களில் தினமும் காலை 8.30 மணிக்கும், இரவு 9 மணிக்கும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. இம் மாதம் 26 ஆம் தேதி இரவு 11 மணிக்கு செப்பு சப்பரத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜா் வெள்ளை சாத்தி வீதியுலாவும், 27 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடராஜா் பச்சை சாத்தி வீதியுலாவும், மாலை 6.30 மணிக்கு செப்பு சப்பரத்தில் கங்காளநாதா் வீதியுலாவும் நடைபெறவுள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 28 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 29 ஆம் தேதி காலை 6 மணிக்கு தீா்த்தவாரியும், 9.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com