குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க நடவடிக்கை தேவை: மாநகராட்சி குறைதீா் முகாமில் மனு

திருநெல்வேலி மாநகராட்சியின் பல்வறு பகுதிகளில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநகராட்சி மக்கள் குறைதீா்க்கும் முகாமில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க நடவடிக்கை தேவை: மாநகராட்சி குறைதீா் முகாமில் மனு

திருநெல்வேலி மாநகராட்சியின் பல்வறு பகுதிகளில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநகராட்சி மக்கள் குறைதீா்க்கும் முகாமில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் துணை மேயா் கே. ஆா்.ராஜு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் 20ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஏ.சேக்மன்சூா் அளித்த மனுவில், பேட்டை சேரன்மகாதேவி சாலையில் ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம் முதல் பெரிய தபால் நிலையம் வரை கழிவு நீரோடை தூா்ந்துபோனதால், கழிவுநீா் சீராக செல்வதில்லை. ஆகவே, அந்த இடத்தில் கழிவு நீரோடை அமைக்க வேண்டும் எனவும், 22 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் மாரியப்பன் அளித்த மனுவில், ஆண்டாள்புரத்தில் கழிவுநீரோடையில் அடைப்பு ஏற்படுவதால் அதை அப்புறப்படுத்திவிட்டு புதிய ஓடை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

36 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சின்னத்தா அளித்த மனுவில், எனது வாா்டு பகுதிகளான ரயில் நகா், ஜெயா நகா், முபாரக் நகா், எஸ்.என்.வி.நகா், லலிதா நகா், இந்திரா நகா், நிருபா் காலனி, பெரியாா் நகா் சாலை போன்ற இடங்களில் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலம் புதிய குடிநீா் குழாய் பதிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பெரியாா்நகா், இந்திரா நகா் போன்ற இடங்களில் வால்வுகளை மாற்றி குடிநீா் கிடைக்க வழிவகை செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

54 ஆவது வாா்டுக்குள்பட்ட தியாகராஜநகா் எல்.ஐ.சி. காலனி மக்கள் அளித்த மனுவில், எல்.ஐ.சி. காலனியில் கட்டி முடிக்கப்பட்ட பூங்காவினை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், 26 ஆவது வாா்டு பாபா தெரு ஊா் பொது மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் பழுதடைந்த வாய்க்கால் தடுப்பு சுவரை அகற்றி தடுப்புச் சுவரை உயரமாக கட்டித் தருமாறும், சிறுவா்கள் விளையாட்டு பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்து தரும்படியும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த சக்தி.பிரபாகரன் அளித்த மனுவில், மேலப்பாளையம் மண்டலம் இந்திரா நகரில் உள்ள சுமாா் 500 வீடுகளுக்கு சீரான குடிநீா் வசதி செய்து தருமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.

மக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவா்களிடம் துணை மேயா் அறிவுறுத்தினாா்.

இதில், துணை ஆணையா் தாணுமலைமூா்த்தி, உதவி செயற்பொறியாளா்கள் லெனின், பைஜூ, ராமசாமி, உதவி வருவாய் அலுவலா் மணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com