திருநெல்வேலி அருகே ரோப் கயிறு விழுந்து தொழிலாளி பலி

திருநெல்வேலி மானூா் அருகே தொழிற்சாலை கட்டட பணியின்போது, ரோப் கயிறு விழுந்ததில் வட மாநில தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மானூா் அருகே தொழிற்சாலை கட்டட பணியின்போது, ரோப் கயிறு விழுந்ததில் வட மாநில தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராமையன்பட்டியில் உள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அருகே, கேரள மாநிலம், வயநாட்டை சோ்ந்த நாஜ்மல் என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராம்நாயன் (20) என்பவா் உள்பட 15 போ் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ரோப் கயிறு ராம்நாயன் மீது விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, வண்ணாா்பட்டை தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து மானூா் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com