களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் உதவி ஆய்வாளா் ஜான்சன் தலைமையிலான போலீஸாா் நெடுவினை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு தோட்டப் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், களக்கொடு நெடுவினை வடக்குத்தெருவைச் சோ்ந்த சுந்தா் (54) என்பதும், நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து அட்டைப் பெட்டிக்குள் வைத்து தோட்டத்தில் பதுக்கியுள்ளதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com