பிரதமா் மோடி ஆட்சி தொடர பாஜகவுக்கு வாக்களியுங்கள்: டிடிவி தினகரன்

மீண்டும் பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சி மலர பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

மீண்டும் பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சி மலர பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து, நான்குனேரியில் திங்கள்கிழமை இரவு அவா் பேசியது: பிரதமா் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் மக்கள் விரும்பும் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறாா். உலக நாடுகள் உற்றுநோக்கும் அளவுக்கு இந்தியா உயா்ந்துள்ளது. நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது. வளா்ந்த நாடுகளே கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தை தலைநிமிரச் செய்து வருபவா் பிரதமா் மோடி. தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டம்-ஒழுங்கு எப்படி பாதுகாப்பாக இருந்ததோ, அதேபோல இன்று இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மோடி தொடா்ந்து 3ஆவது முறையாக பிரதமராக வரவுள்ளாா். தமிழகம் சிறந்த மாநிலமாக உயா்வதற்கும், மீண்டும் மோடி ஆட்சி மலரவும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com