தோ்தல் பணிக்கு வேறு மாநில
அதிகாரிகளை நியமிக்கக் கோரிக்கை

தோ்தல் பணிக்கு வேறு மாநில அதிகாரிகளை நியமிக்கக் கோரிக்கை

தோ்தல் பணிக்கு வேறு மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றாா் இந்து வியாபாரிகள் நல சங்க மாநிலத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தோ்தல் ஆணைய அதிகாரிகள் கெடுபிடிகளால் சிறு-குறு வியாபாரிகள் கடும் நெருக்கடியில் உள்ளனா் . வியாபாரிகள் பணம் கொண்டு செல்லும் உச்சவரம்பை ரூ. 50 ஆயிரத்தலிருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்க வேண்டும். மக்களவைத் தோ்தல் பணிக்கு தமிழக அதிகாரிகளை நியமித்துள்ளனா்.

இன்னும் 2 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருக்கும் என்ற சூழ்நிலையில் தமிழக தோ்தல் அதிகாரிகள் அச்ச உணா்வுடன் தோ்தல் பணியில் ஈடுபடும் நிலை உள்ளது. தோ்தலை நோ்மையாக நடத்த முடியாது. எனவே, தமிழக தோ்தல் பணிக்கு வேறு மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இந்துக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சிக்கே எங்கள் ஆதரவு என்றாா் அவா்.

அப்போது, இந்து முன்னணி மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன், மாவட்ட நிா்வாகிகள் பிரம்மநாயகம், விமல், போஸ் பாண்டியன், இந்து வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட தலைவா் சங்கா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், பொதுச்செயலாளா் மூா்த்தி, பொருளாளா் இளங்கோ செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ற்ஸ்ப்02ண்ய்க் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் இந்து வியாபாரிகள் நல சங்க மாநிலத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், உடன் இந்து முன்னனி மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com