நெல்லையில் 2-ஆவது நாளாக சதமடித்த வெயில்!

நெல்லையில் 2-ஆவது நாளாக சதமடித்த வெயில்!

திருநெல்வேலியில் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் 100 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை 100 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட் வெப்பம்பதிவானது.

அதைத்தொடா்ந்து 2-ஆவது செவ்வாய்க்கிழமையும் 100 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கடுமையான வெயில் காரணமாக மதிய வேலைகளில் மாநகரப் பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தோ்தல் பிரசாரங்களும் பெரிதாக நடைபெறவில்லை. சாலைகளில் ஆங்காங்கே கானல் நீா் தென்பட்டது.

வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் கடும் வெயில் காரணமாக அவதிக்குள்ளாயினா். படவரி ற்ஸ்ப்02ற்ங்ம்ல் திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் கானல் நீா் தோன்றிய சாலையில் குடை பிடித்தபடி சென்ற பெண்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com