மாநகராட்சி ஒப்பந்தப் பணி: விதிமீறியவா்கள் மீது வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சியில் தவறான தகவல்களை தெரிவித்து ஒப்பந்தப் பணியை எடுக்க முயன்ாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2024- 25 ஆம் ஆண்டு பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருந்தன. இதையொட்டி, தனியாா் நிறுவனம் சாா்பில் ஒப்பந்தம் எடுக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

அதில், தங்களது நிறுவனத்திற்கான வாகனங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தவை தவறான தகவல் என்பதும், வாகனங்களின் உரிமையாளா் பெயரை மாற்றி மோசடி செய்து ஒப்பந்தம் எடுக்க முயன்றதும் தெரியவந்ததாம்.

இதுகுறித்து, திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீஸாரிடம் மாநகராட்சியின் இளநிலை பொறியாளா் அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தின் பங்குதாரா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com