வி.கே.புரம் பகுதியில் போலீஸாா் அணிவகுப்பு

வி.கே.புரம் பகுதியில் போலீஸாா் அணிவகுப்பு

விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் அறிவுறுத்தலின்பேரில், விக்கிரமசிங்கபுரம், காக்கநல்லூா் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

இதில், 58 ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com