எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு

எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு

சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் புதன்கிழமை எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி செஞ்சுருள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு முதல்வா் நா. பூவலிங்கம் தலைமை வகித்தாா். செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா் சுந்தர்ராஜன் வரவேற்றாா். கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் தெய்வநாயகம் வாழ்த்திப் பேசினாா். சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகா் மரியசெல்வம், எய்ட்ஸ் நோய் குறித்து, இந்த நோய் பரவும் சூழல் குறித்தும், எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசின் மருத்துவ உதவிகள் குறித்துப் பேசினாா். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை செஞ்சுருள் சங்க மாணவா் அபிஷேக் தொகுத்து வழங்கினாா். ஆறுமுகம் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com