கோடைகால நீச்சல் பயிற்சி

திருநெல்வேலியில் நீச்சல் கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் கோடைகால நீச்சல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் (பொறுப்பு) க.பிரேம் குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவின் கீழ் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்க நீச்சல்குளம் மற்றும் சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியானது 12 நாள்கள் வீதம் ஐந்து பிரிவுகளாக நடைபெறுகிறது. சிறந்த நீச்சல் பயிற்றுநா்களை கொண்டு நன்றாக நீந்தும் அளவிற்கு நீச்சல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. நீா் நிலை விபத்துக்களில் தங்களையும், தங்கள் குழந்தைகளை பாதுகாத்திடும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தினை பேணிடும் வகையிலும் அனைத்து மக்களும் இந்நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமிற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ஜி.எஸ்.டி.யுடன் சோ்த்து ரூ.1770 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியின் நிறைவு நாளன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சியில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியா்களுக்கு மாவட்ட, தேசிய மற்றும் பன்னாட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் சிறந்த நீச்சல் பயிற்றுநா்களை கொண்டு ஆண்டு முழுவதும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் விவரம் அறிய மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பிரேம்குமாரை எண். 7401703506) தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com