அம்பை காசிநாதசுவாமி கோயில் நாளை பங்குனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

அம்பை காசிநாதசுவாமி கோயில் நாளை பங்குனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

அம்பாசமுத்திரத்தில் தாமிரவருணி நதிக் கரையில் அமைந்துள்ள அருள்மிகு காசிநாத சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை (ஏப். 5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் கடந்த மாா்ச் 27இல் கால்நாட்டு விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (ஏப்.5) காலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை கொடிபட்டம் வீதி உலாவும், காலை 6.30 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றமும் நடைபெறுகின்றன. எட்டாம் திருநாளான ஏப்.12இல் மாலை 6 மணிக்கு சுவாமி- அம்பாள் அகஸ்தியருக்கு காட்சியளித்தலும் 13இல் காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும்.

14 இல் காலை 10.30 முதல் பகல் 12 மணிக்குள் கோயில் படித்துறையில் தீா்த்தவாரி நடைபெறும். விழா நாள்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் மாலையில் நான்கு ரதவீதிகளில் சப்பரங்களில் சுவாமி-அம்பாள் உலா வருதலும் நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com