ஆதிதிராவிடா் பள்ளி மாணவா்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்

ஆதிதிராவிடா் பள்ளி மாணவா்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு பாளையங்கோட்டையில் அண்மையில் தொடங்கியது. திருநெல்வேலி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு ஆதிதிராவிடா் நல விடுதிகளில் பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு நுழைவுத் தோ்வுக்கான ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதன் தொடக்க விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பென்னட் ஆசீா் தலைமை வகித்தாா். மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலா் அழகு ராஜன், தனியாா் பள்ளி முதல்வா் ஜெயந்தி, காப்பாளா் காப்பாளினிகள், தலைமை ஆசிரியா்கள், பெற்றோா்கள், கண்காணிப்பாளா் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து இம் மாதம் 30 ஆம் தேதி வரை தினமும் காலை முதல் மாலை வரை பயிற்சியளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com