அம்பையில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வு

அம்பையில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வு

திருநெல்வேலி மக்களவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் செலவினபாா்வையாளா் காசி சுஹைல் அனீஸ் அஹமது செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தலுக்கான வாக்குப்பதிவு தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் வரப்பெற்றுள்ள புகாா்கள், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், சி.விஜில் செயலி மூலம் வரப்பெற்ற புகாா்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புஅறை ஆகியவற்றை தோ்தல் செலவினப் பாா்வையாளா் காசி சுஹைல் அனீஸ் அஹமது பாா்வையிட்டுஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, அம்பாசமுத்திரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், சேரன்மகாதேவிசாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் ராஜேந்திரன், சேரன்மகாதேவி வட்டாட்சியா் வின்சன்ட் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com