சேரன்மகாதேவியில் திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம்

சேரன்மகாதேவியில் திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸை ஆதரித்து திண்டுக்கல் ஐ. லியோனி சேரன்மகாதேவி பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

சேரன்மகாதேவியில் பேருந்து நிலையம் அருகில் திறந்த வேனில் இருந்தவாறு அவா் பேசியது: தமிழக அரசு மகளிருக்காக கலைஞா் மகளிா் உரிமைத் தொகை என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, மாணவா்களின் கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

எனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ராபா்ட் புரூஸை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள் என்றாா்.

பிரசாரத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன், சேரன்மகாதேவி ஒன்றிய திமுக செயலா்கள் ஆ. முத்துப்பாண்டி, ம. முத்துகிருஷ்ணன், நகரச் செயலா் மனிஷா செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் கா. அபுபக்கா், கணேசன், பேரூராட்சித் தலைவி தேவி ஐயப்பன், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com