பாபநாசத்தில் ஏப். 12இல் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

பாபநாசம், பாபநாச நாதா் கோயில் சித்திரை விஷு திருவிழாவில் வெள்ளிக்கிழமை (ஏப்.12) 8ஆம் மண்டகப்படியில் ஸ்ரீ நடராஜருக்கு பட்டங்கட்டியாா் சமுதாயம் சாா்பில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு பாபநாச நாதா் திருக்கோயிலில்சித்திரை விஷூ திருவிழா ஏப். 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 8ஆம் மண்டகப்படித்திருவிழா பட்டங்கட்டியாா் சமுதாயம் சாா்பில் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.இதில், விக்கிரமசிங்கபுரம், சிவந்தியப்பா் கோயிலில் மாலை 3.00 மணியளவில் ஸ்ரீ நடராஜா்சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து ஸ்ரீநடராஜருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடைபெற்று சாமகானப் பிரியன் பேரிகைக்குழு சிவபூத கண திருக்கயிலாயவாத்தியங்கள் முழங்க பெரிய சப்பரத்தில் ஸ்ரீ நடராஜா் புறப்பட்டு விக்கிரமசிங்கபுரம் ரத வீதிகளில் வலம் வருகிறாா். பின்னா் இரவு 9 மணிக்கு பாபநாசம் திருக்கோயில் சென்றடைகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com