பாப்பாக்குடி ஒன்றியப் பகுதிகளில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன், செவ்வாய்க்கிழமை பாப்பாக்குடி ஒன்றியத்தில் கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

பாப்பாக்குடி ஒன்றியம் வடக்கு அரியநாயகிபுரத்தில் இருந்து நயினாா் நாகேந்திரன் பிரசாரத்தை தொடங்கினாா். தொடா்ந்து முக்கூடல் பேரூராட்சிப் பகுதி, சடையப்பபுரம், கலியன்குளம், ஓடை மறிச்சான், இலந்தைகுளம், அனந்த நாடாா்பட்டி, இடைகால், பள்ளக்கால் பொதுக்குடி, வழுதூா், கபாலிபாறை உள்ளிட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தாா்.

இதில், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எச். மனோஜ்பாண்டியன், பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

முக்கூடல் பகுதியில் நயினாா் நாகேந்திரன் பிரசாரம் செய்தபோது, அவரது காா் மற்றும் பிரசார வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com