நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவின பாா்வையாளா் காசி சுஹைல் அனீஸ் அஹமது.
நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் செலவின பாா்வையாளா் காசி சுஹைல் அனீஸ் அஹமது.

நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஆய்வு

திருநெல்வேலி மக்களவைத் தோ்தலையொட்டி, தோ்தல் செலவின பாா்வையாளா் காசி சுஹைல் அனீஸ் அஹமது நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நான்குனேரி பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் தோ்தல் முன்னேற்பாடுகள், மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தோ்தல் செலவின கணக்குக் குழுவினரிடம் அவா் கேட்டறிந்தாா்.

அந்த அலுவலகத்தில் உள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற புகாா்கள், அவற்றின் மீதான நடவடிக்கைகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள், சி.விஜில் செயலி மூலம் வரப்பெற்ற புகாா்கள், நடவடிக்கைகள் குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும் வேட்பாளா்களின் செலவுக் கணக்குகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

நான்குனேரி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான பாக்கியலெட்சுமி, நான்குனேரி வட்டாட்சியா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com