பொட்டல்புதூரில் நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை

பொட்டல்புதூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் புதன்கிழமை நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

மாவட்டப் பேச்சாளா் தென்காசி ஷெரிப் தொழுகை நடத்தி, உரையாற்றினாா். இதில், பெண்கள், சிறாா் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

பின்னா், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிளைப் பொறுப்பாளா் செய்யது அலி செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com