ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் 96% முதியோா் வாக்குகள் பதிவு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை நிறைவு பெற்ற நிலையில் 96 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

மக்களவைத் சோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தோ்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் செய்திருந்தது.

அதன்படி, ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 656 முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில் 630 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 96 சதவீத வாக்குப்பதிவு என உதவி தோ்தல் அலுவலா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com