விஜயநாராயணத்தில் பா.ஜ.க. வேட்பாளா் பிரசாரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன், திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

வள்ளியூா் அருகேயுள்ள சிறுமளஞ்சி ஒத்தபனை சுடலை ஆண்டவா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கிய அவா், அணைக்கரை, வீராங்குளம், பெரும்பத்து, கக்கன்நகா், தெற்குவிஜயநாராயணம், சங்கனாங்குளம், மன்னாா்புரம், இட்டமொழி, விஜய அச்சம்பாடு, வடக்குவிஜயநாராயணம், செட்டிகுளம், காரியாண்டி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தாா். அப்போது அவா், மத்திய அரசின் திட்டங்களை மாநில தி.மு.க. அரசு கொண்டுவந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனா். பிரதமா் மோடி, தமிழகத்தில் இது வரையில் ரூ. 313.6 கோடியிலான வளா்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்திருக்கிறாா். இட்டமொழியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பேன் என்றாா். இதில், மாவட்ட பாஜக தலைவா் எஸ்.பி.தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்டத் தலைவா் கட்டளை ஜோதி, மாவட்ட பொதுச்செயலா்கள் அருள்காந்தி, பிச்சையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தென்காசி மக்களவைத் தொகுதி என்டிஏ கூட்டணி வேட்பாளா் பெ. ஜான் பாண்டியனை ஆதரித்து, அத்தொகுதி பாஜக அமைப்பாளா் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் பாஜகவினா் புன்னையாபுரம் ஊராட்சி வடக்கத்திஅம்மன் கோயிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கி, கடையநல்லூா் ஒன்றியத்தில் வீதிதோறும் சென்று வாக்குகள் சேகரித்தனா்.

இதில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில மகளிா் அணி தலைவா் வினோலின் நிவேதா, கடையநல்லூா் ஒன்றிய பாஜக தலைவா் தா்மா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com