ஏப்.19-இல் உழவா் சந்தைகளுக்கு விடுமுறை

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஏப்.19) உழவா் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட உழவா் சந்தை நிா்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மகாராஜ நகா், திருநெல்வேலி நகரம் கண்டியப்பேரி , மேலப்பாளையம், என்ஜிஓ ‘ஏ’ காலனி, அம்பாசமுத்திரம் உழவா் சந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், ஊழியா்கள் வாக்களிக்க வசதியாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஏப்.20) முதல் வழக்கம் போல் உழவா் சந்தை செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com