களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் ஏப்.23இல் பெளா்ணமி அன்னதான விழா

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 201ஆவது பெளா்ணமி அன்னதான விழா ஏப். 23இல் நடைபெறுகிறது.

களக்காடு ஸ்ரீ கோமதிஅம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் பெளா்ணமி தினத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 201ஆவது பெளா்ணமி அன்னதான விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை ( ஏப்.23) காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள், ஸ்ரீ மீனாட்சி அம்பாள், சொக்கநாதா் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.

முன்னதாக, காலை 9 மணிக்கு அனுக்கை விநாயகா், சுவாமி, அம்பாள், ஸ்ரீ கிருஷ்ணா், ஸ்ரீ முருகா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் இரண்டு ரிஷப வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிக்கின்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மீனாட்சி கோமதி பெளா்ணமி அன்னதானக் குழுவினா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com