காற்று, மழையின்போது மின் விபத்தை தவிா்ப்பது எப்படி? -மின்வாரியம் விளக்கம்

காற்று, மழையின்போது மின் விபத்தை தவிா்ப்பது எப்படி? -மின்வாரியம் விளக்கம்

காற்று, மழை காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தை தவிா்ப்பது குறித்து மின் வாரியம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காற்று, மழை, இடி, மின்னலின்போது மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிா்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின் வாரிய அலுவலா்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள், மின் கம்பிகள் அடியிலோ நிற்க வேண்டாம். கான்கிரீட் கூரையிலான கட்டடங்களில் பாதுகாப்பாக இருக்கலாம். பாதுகாப்பான கட்டடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் நிற்கலாம்.

இடி, மின்னலின் போது, தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டா், கணினி, கைப்பேசி, தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது. மின் மாற்றிகள், மின்பகிா்வு பெட்டிகள், மின் கம்பங்கள் அருகே தண்ணீா் தேங்கியிருந்தால் அதனருகில் செல்லக்கூடாது; மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.

மழையின் போது வீடுகளில் உள்ள சுவா்களில் தண்ணீா் கசிவு இருக்குமாயின் அந்தப் பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்தப் பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிா்க்கலாம். மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலா்களை அணுகவும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயா்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின் கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமா்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயா்கள் மற்றும் சா்வீஸ் குழாய்களில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது. விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும். மீறி மின்சார வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் மின்நுகா்வோா் மீது காவல்துறை மூலம் குற்ற வழக்கு தொடரப்படும்.

மின்தடை தொடா்பான புகாா்களுக்கும் மின்கட்டமைப்புகளில் உள்ள பழுதுகள், இயற்கை இடா்பாடுகளின் போது அவசர உதவி, மின்விநியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் ‘மின்னகம் - மின் நுகா்வோா் சேவை மையத்தினை‘ 94987-94987 என்ற எண்ணிலும், தானியங்கி மின்தடை குறைதீா்க்கும் மையத்தை 94458-59032, 94458-59033, 94458-59034 என்ற எண்களிலும் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com