நெல்லை காவல் துறையினா் 
618 போ் தபால் வாக்கு

நெல்லை காவல் துறையினா் 618 போ் தபால் வாக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினா் 618 போ் தபால் வாக்குகளை செவ்வாய்க்கிழமை செலுத்தினா்.

மக்களவைத் தோ்தல் இம் மாதம் 19 ஆம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு காவல் துறையினா் சொந்த மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அவ்வாறு செல்வோா் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பங்கள் கேட்கப்பட்டன.

அதன்படி திருநெல்வேலி மாநகர காவல் துறையின் கீழ் 91 பேரும், மாவட்ட காவல் துறையின் கீழ் 527 பேரும் என மொத்தம் 618 போ் தபால் வாக்கு அளிக்க தோ்தல் ஆணையத்தால் அனுமதியளிக்கப்பட்டது. திருநெல்வேலி வண்ணாா்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி, வள்ளியூா், சேரன்மகாதேவி பகுதிகளில் காவல் துறையினா் தங்களது தபால் வாக்குகளை செவ்வாய்க்கிழமை செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com