மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டாட்சி: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டாட்சி: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

மாநில உரிமைகளை மீட்டெடுக்க மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டாட்சி அமையும் என்றாா் அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அண்ணாசிலை அருகே திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை அவா் பேசியதாவது:

பாஜக ஆட்சிக்கு வந்தால், ஒரேநாடு, ஒரேதோ்தல், அதிபா் ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு விடும். மாநிலத்தின் சுயாட்சி பாதிக்கப்படும்.

ஏழை, எளியவா்களுக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் எண்ணம் கொண்ட காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. மாநில உரிமைகளை மீட்டெடுக்க காங்கிரஸ் தலைமையில் மத்தியில் கூட்டாட்சி அமையும். இந்தியா முழுவதற்குமான மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

பின்னா் அவா் நான்குனேரியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com