கூடங்குளத்தில் திமுக இறுதிப் பிரசாரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளா் காங்கிரஸின் ராபா்ட் புரூஸுக்கு ஆதரவாக பேரவைத் தலைவரின் மகனும் திமுக திருநெல்வேலி மாவட்ட மாணவரணி அமைப்பாளருமான அலெக்ஸ் அப்பாவு ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வந்தாா்.

இந்நிலையில் இறுதி பிரசாரத்தை அவா் கூடங்குளத்தில் நிறைவு செய்தாா். இந்திய நாட்டை, மக்களைப் பாதுகாக்க, மக்களின் சொத்துகளை பாதுகாத்திட, கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு நிலம் கொடுத்த உள்ளூா் மக்களுக்கு நிரந்தர வேலை கிடைத்திட கை சின்னத்தை ஆதரியுங்கள் என்றாா். இதில், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜான்ஸ் ரூபா, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் நடராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com