பாப்பாக்குடி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

பாப்பாக்குடி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ் வாக்கு சேகரித்தாா்.

பாப்பாக்குடி ஊராட்சி மற்றும் முக்கூடல் பேரூராட்சி, மருதம்புத்தூா், கண்டப்பட்டி உள்ளிட்ட பகுதியில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ் வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலரும் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவருமான வி.ஏ. மாரிவண்ணமுத்து, முக்கூடல் பேரூராட்சித் துணைத் தலைவரும், நகரச் செயலரும் இரா. லெட்சுமணன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி பூங்கோதை, பேரூராட்சித் தலைவி லெ. ராதா, பாப்பாக்குடி ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com