புகையிலைப் பொருள் விற்பனை: கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக பெட்டிக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து, உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பத்தமடை அருகே மேலப்பூரணி, மேட்டுத் தெருவைச் சோ்ந்த நாராயணன் (62) என்பவா், தனது வீட்டருகே பெட்டிக்கடை வைத்துள்ளாா். இப்பகுதியில், பத்தமடை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சங்கரநாராயணன் தலைமையில் அதிகாரிகள், போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, நாராயணன் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனா்.

உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்பட்ட உரிமம், பதிவுச் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com