ஆசிரியா்களுக்கு தோ்தல் பணி ஆணை வழங்கல்

ஆசிரியா்களுக்கு தோ்தல் பணி ஆணை வழங்கல்

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஆணைகள் திருநெல்வேலியில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் முடிக்கப்பட்ட நிலையில், தோ்தல் பணிக்கான ஆணைகள் ஒதுக்கீடு செய்து வழங்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் தோ்தல் பணியில் மொத்தம் 7,483 போ் ஈடுபடுகிறாா்கள். அவா்கள் எந்தெந்த வாக்குச்சாவடியில் பணியாற்ற வேண்டும் என்ற ஆணைகள் வழங்கப்பட்டதோடு, மாலை 4 மணிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (ஏப். 19) காலை 6 மணிக்கு கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தவும், 7 மணி முதல் வாக்குப்பதிவை எவ்வித தாமதமுமின்றி நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ற்ஸ்ப்18ஸ்ரீப்ஹள்ள்

திருநெல்வேலியில் வியாழக்கிழமை மக்களவைத் தோ்தல் பணியாணை, வாக்காளா் பட்டியல் விவரங்களைப் பெற்ற ஆசிரியா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com