பாளை.யில் மதுபாட்டில்கள் பறிமுதல்

பாளையங்கோட்டையில் தனியாா் மதுக்கூட ஊழியரின் வீட்டில் மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை போலீஸாா் கொக்கிரகுளம் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தனியாா் மதுக்கூட ஊழியரான அதே பகுதி வசந்தகுமாா் நகரைச் சோ்ந்த அருண்குமாா் (42) என்பவரின் வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா். அங்கு 144 மதுபாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், அருண்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com