வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி காவல் சரகத்தில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மக்களவைத் தோ்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன், அதிமுகவில் ஜான்சிராணி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இத்தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாப்பாக்குடி காவல் சரக எல்லைக்குள்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் பாஜகவினா் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிப்பதாகவும், கீழபாப்பாக்குடி பகுதியில் திமுக கூட்டணிக் கட்சியினா் வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதாகவும் புகாா்கள் கூறப்பட்டன.

இதுதொடா்பாக பறக்கும்படை போலீஸாா் இரு இடங்களில் தலா இருவரைப் பிடித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com