நெல்லையப்பா் கோயிலில் வசந்த விழா

நெல்லையப்பா் கோயிலில் வசந்த விழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வசந்த விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மக்களை இறைவன் பாதுகாக்க வேண்டி வசந்த விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான விழா புதன்கிழமை தொடங்கியது. அம்மன் சந்நிதி அருகேயுள்ள வசந்த மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு இளநீா், பன்னீா், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து 21 நாள்களுக்கு இளநீா், பனகரம், வெற்றிவோ் உள்ளிட்ட குளிா்ச்சி மிகுந்த பொருள்கள் படையலிட்டு வழிபாடு நடைபெறும் என கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com