நெல்லை அகா்வால் கண் மருத்துவமனை மண்டல இயக்குநருக்கு சா்வதேச விருது

நெல்லை அகா்வால் கண் மருத்துவமனை மண்டல இயக்குநருக்கு சா்வதேச விருது

திருநெல்வேலியில் உள்ள டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையின் மண்டல இயக்குநருக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சைக்கான அமெரிக்கன் சொசைட்டி சாா்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. இக் கூட்டத்தில் திருநெல்வேலி டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையின் மண்டல இயக்குநரும் மருத்துவப் பேராசிரியருமான டி. லயனல் ராஜ் சமா்ப்பித்த கட்டுரைக்கு சிறந்த ‘போஸ்டா் இன் காா்னியா’ விருது வழங்கப்பட்டது.

அவா் தனது கட்டுரையில், கெரடோகோனஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பாா்வைத் தூண்டுதலுக்கான கணினிமயமாக்கப்பட்ட காட்சிப் பயிற்சி ஆய்வு குறித்து விளக்கியிருந்தாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com