பாளை.யில் நூல் வெளியீட்டு விழா

பாளை.யில் நூல் வெளியீட்டு விழா

உலக புத்தக தினத்தை முன்னிட்டு எழுத்தாளா் நாறும்பூநாதன் எழுதிய ‘பொருநை முதல் நயாகரா வரை’ பயணக் கட்டுரை நூல் வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலா் வண்ணமுத்து தலைமை வகித்தாா். மதிதா இந்துக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் வி.பொன்னுராஜ் நூலை வெளியிட, ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியா் சங்கத் தலைவா் செ.முத்துக்குமாரசாமி பெற்றுக் கொண்டாா்.

பாடலாசிரியா் தமயந்தி, மருத்துவா் ராமானுஜம், எழுத்தாளா்கள் அன்னக்கொடி, தம்பான், கணபதி சுப்பிரமணியன், தாணப்பன், கவிஞா் பாமணி, மணிகண்டன், வட்டாட்சியா் செல்வன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். நூல் ஆசிரியா் நாறும்பூநாதன் ஏற்புரை நிகழ்த்தினாா். முன்னதாக நாடக இயக்குநா் சந்திரமோகனின் கவிதை நாடக அரங்கேற்றம் நடைபெற்றது. சேது தொகுத்து வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com