லிட்டில் ப்ளவா் மாடல் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி கோடீஸ்வரன்நகரில் உள்ள லிட்டில் ப்ளவா் மாடல் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு லிட்டில் ப்ளவா் கல்விக் குழுமங்களின் தலைவா் அ.மரியசூசை தலைமை வகித்தாா். ஆழ்வாா்குறிச்சி குட் ஷெப்பா்ட் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஜோஸ்பின் விமலா, லிட்டில் ப்ளவா் பப்ளிக் பள்ளித் தாளாளா் அண்டோ ஜோ.செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஹரிராம், ப்ரிமன், அப்பாஸ் மைதீன், சிவ ப்ரியங்கா, பாக்கியலட்சுமி, கோமதி உள்ளிட்டோா் பரிசுகள் வென்றனா். பெற்றோா்கள், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com