சுத்தமல்லியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

சுத்தமல்லி அருகே கோடகநல்லூரைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூா் கீழ அக்ரஹர தெருவைச் சோ்ந்தவா் பாலசுந்தா் (24). இவா் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் முன்னீா்பள்ளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், பாலசுந்தரம் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com