நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

நாசரேத்தில் உள்ள தூய யோவான் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில், ஆண்டு விழா, விளையாட்டு விழா நடைபெற்றது.

தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து விழாவைத் தொடக்கிவைத்தாா். நிறுவனத் தாளாளா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற ஆசிரியை வயலெட் எலிசபெத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்திப் பேசினாா்.

விளையாட்டுப் போட்டிகளை உடற்கல்வி இயக்குநா் பிரைட்டி செல்வகுமாரி நடத்தினாா். அவற்றில் வெற்றி பெற்ற, தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், குருவானவா் எலிசபெத், தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் வயோலா மாா்க்ரெட், தலைமையாசிரியை ஜுலியட் ஜெயசீலி, தூய யோவான் மாதிரிப் பள்ளி தலைமையாசிரியை ஷீலா, ஓய்வுபெற்ற ஆசிரியை ஜெமிமா ராஜசேகா், விரிவுரையாளா்கள், அலுவலா் கள் பங்கேற்றனா். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

முதல்வா் லீதியாள் கிரேஸ்மணி வரவேற்றாா். நிகழ்ச்சிகளை விரிவுரையாளா் ஞானமலா் தொகுத்து வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com