ஏப்.30-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி: ஆணையா்

திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால், வரியில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து விதமான கட்டடங்களுக்கும் 2024-2025 ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான (01.04.2024 முதல் 30.09.2024 வரை) சொத்து வரியை வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்துபவா்களுக்கு அவா்களுடைய சொத்து வரியில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

எனவே, கட்டட உரிமையாளா்கள் தங்களது கட்டடங்களுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்தி திருநெல்வேலி மாநகராட்சியின் பொதுமக்களுக்கான வளா்ச்சிப் பணிகளில் தங்களின் பங்களிப்பை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சிரமமின்றி சொத்து வரிகளை செலுத்திடும் வகையில் அனைத்து மண்டலத்திற்குள்பட்ட அனைத்து வரிவசூல் மையங்களும் விடுமுறை தினங்கள் தவிர ஏனைய வேலை நாள்களில் காலை 9.30 மணிமுதல் மாலை 4 மணிவரை செயல்படும்.

மேலும், ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவும் சொத்து வரிகளை செலுத்திக் கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com