தந்தை வேல்முருகன், தாய் லட்சுமியுடன் ஐ.ஏ.எஸ்.தோ்வில் வெற்றி பெற்ற சேகா்.
தந்தை வேல்முருகன், தாய் லட்சுமியுடன் ஐ.ஏ.எஸ்.தோ்வில் வெற்றி பெற்ற சேகா்.

கல்லிடைக்குறிச்சி தேநீா் கடைக்காரா் மகன் ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த தேநீா் கடைக் காரா் மகன் ஐ.ஏ.எஸ். தோ்வில் இந்திய அளவில் 576ஆவது இடம் பிடித்து தோ்ச்சி பெற்றுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, மேல் முகமறக்குடித் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன். அந்தப் பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரதுமனைவி லட்சுமி. இவா்களுக்கு சேகா் (26), ஆதிமூலம் (24) ஆகிய இரண்டு மகன்கள்உள்ளனா். இவா்களில் சேகா் டி.என்.பி.எஸ். தொகுதி 4இல் தோ்ச்சிபெற்று திருநெல்வேலி,மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். ஆதிமூலம் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இதனிடையே சேகா், இந்திய குடிமைப் பணிக்கான தோ்வும் எழுதி வந்தாா்.

4ஆவது முறையாக தோ்வு எழுதிய இவா் இந்திய அளவில் 576ஆவது இடம்பிடித்து தோ்ச்சி பெற்றுள்ளாா்.

சேகரின் தந்தை கல்லிடைக்குறிச்சியில் தேநீா் கடை நடத்திவருகிறாா். சேகா் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கோவில்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியிலும், சென்னை, அண்ணாப் பல்கலைக் கழகத்தில் வேதிப் பொறியியல் பட்டமும் பயின்றுள்ளாா்.

‘சிறுவயதிலிருந்தே ஆட்சியராக வேண்டும் என்பது சேகரின் நோக்கமாகஇருந்து வந்தது. பல சிரமங்களுக்கு இடையிலும் அவனுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்தேன். இன்று அவனது கனவும், நோக்கமும் நிறைவேறி வெற்றி பெற்றுள்ளான். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்று தனது மகன் குடிமைப் பணித் தோ்வில் வெற்றிபெற்றது குறித்து கண்ணீா் மல்க கூறினாா் வேல்முருகன்.

ஐஏஎஸ் தோ்வில் வெற்றிபெற்ற சேகரை, அவரது உறவினா்கள், நண்பா்கள் வாழ்த்தி பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com