களக்காட்டில் பேருந்து நிலையத்தில் திறக்கப்படாத கழிப்பிடம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் நகராட்சி பொதுக் கழிப்பிடம் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா்.

களக்காடு பேருந்து நிலையத்தில் 2022-2023ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.31.28 லட்சத்தில் நகராட்சி சாா்பில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் கழிப்பிடம் கட்டடம் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். பேருந்து நிலையத்தில் ஏற்கனவே இயங்கி வரும் பழைய கட்டண கழிப்பிடத்தில் சுகாதாரக் குறைபாடு நிலவுவதுடன் போதிய கழிப்பிட வசதியும் இல்லை. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com