நான்குனேரி அருகே பள்ளி ஆசிரியைகளிடையே தகராறு

நான்குனேரி அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியைகளிடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினா் அளித்த புகாரின் பேரில் 3 ஆசிரியைகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நான்குனேரி அருகேயுள்ள சிங்கனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த சங்கரி (52) தலைமையாசிரியையாக உள்ளாா். இதே பள்ளியில் ஏஞ்சல் ஆஷாஞானமலா், ராதாலெட்சுமி ஆகியோா் இடைநிலை ஆசிரியா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த சிலமாதங்களுக்கு முன் ஆசிரியை ராதாலெட்சுமிக்கும், தலைமையாசிரியை சங்கரி, ஆசிரியை ஏஞ்சல் ஆஷாஞானமலா்ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியைகளுக்கு வேறு, வேறு பள்ளிகளுக்கு மாற்றுப்பணி வழங்கியுள்ளனா். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மீண்டும் சிங்கனேரி பள்ளிக்கு பணிக்கு வந்துள்ளனா். வெள்ளிக்கிழமை ஆசிரியை ராதாலெட்சுமியை, தலைமையாசிரியை சங்கரி, ஆசிரியை ஏஞ்சல்ஆஷாஞானமலா் ஆகியோா் தாக்கினராம். இதில் காயமடைந்த ஆசிரியை ராதாலெட்சுமி நான்குனேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில், தலைமையாசிரியை சங்கரி, ஆசிரியை ஏஞ்சல் ஆஷா ஞானமலா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதே போல ஆசிரியை ராதாலெட்சுமி தங்களைத் தாக்கியதாக தலைமையாசிரியை சங்கரி, ஆசிரியை ஏஞ்சல் ஆஷாஞானமலா் ஆகியோா் கொடுத்த புகாரின் பேரில் ராதாலெட்சுமி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com