காய்கனியில் பூச்சி துளைத்தல் பாதிப்பு? வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்

சேரன்மகாதேவி வட்டாரத்தில் காய்கனிகளில் பூச்சி துளைப்பானை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இளங்கலை பயின்று வரும் மாணவிகள் சேரன்மகாதேவி பகுதியில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண்மை பயிற்சி பெற்று வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சேரன்மகாதேவி பகுதியில் சாகுபடி செய்துள்ள காய்கனி வயல்களில் முகாமிட்டு களஆய்வு மேற்கொண்ட மாணவிகள், காய்கனிகளை துளைக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா். அதாவது, டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை கொண்டு கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 2 அட்டையை இலையின் அடிப்பகுதியில் வெயில் படாத வகையில் பொருத்துவதால் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்துவது சாத்தியம் என கல்லூரி முதல்வா் தேரடி மணி தலைமையில் பேராசிரியா்கள் காளிராஜன், இளஞ்செழியன், ஜெயலட்சுமி, மாணவிகள் அபிதா, மோனிகா உள்ளிட்டோா் விளக்கம் அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com