காடன்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மான்.
காடன்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மான்.

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

நான்குனேரி அருகேயுள்ள காடன்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மானை வனத்துறையினா் மீட்டு, கங்கைகொண்டான் மான்கள் சரணாலயத்தில் சோ்த்தனா்.

காடன்குளம் பகுதியில் கிருஷ்ணன் என்பவா் தோட்ட கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலா் முருகன் உத்தரவின்பேரில் விரைவுப் படை வீரா்கள் முருகன், வசந்த் பேச்சிமுத்து மற்றும் சிவன் தாஸ் அடங்கிய குழுவினா், உள்ளூா் இளைஞா்கள், காவல் துறையினா் உதவியுடன் மானை மீட்டனா். சுமாா் ஒரு வயதுடைய ஆண் புள்ளி மான் காயங்களின்றி மீட்கப்பட்டது. பின்னா் அதனை கங்கைகொண்டானில் உள்ள மான்கள் சரணாலயத்தில் கொண்டு விட்டனா்.

X
Dinamani
www.dinamani.com