பாளையங்கோட்டையில் தண்ணீா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கினாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ., உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜு.
பாளையங்கோட்டையில் தண்ணீா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கினாா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ., உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜு.

பாளை.யில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

பாளையங்கோட்டையில் திமுக சாா்பில் இரு இடங்களில் தண்ணீா் பந்தல்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பல்வேறு இடங்களிலும் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை தற்காலிக மாா்க்கெட் வாசல், மாா்க்கெட் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள், நீா்மோா் வழங்கினாா்.

துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாமன்ற உறுப்பினா் கந்தன், அரசன் பொன்ராஜ், காசிமணி, சுடலைக்கண்ணு,மாவட்ட பிரதிநிதி முஸ்தபா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com