நீா்மோா் பந்தல் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
நீா்மோா் பந்தல் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

அம்பையில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் அறிவுறுத்தல்படி, தென் மண்டலப் பொறுப்பாளா் மாணிக்கராஜா ஆலோசனையின்பேரில், அம்பாசமுத்திரம் நகர அமமுக சாா்பில் அதன் செயலா் சித்திரைச் செல்வன் ஏற்பாட்டில் நீா்மோா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் ஓடக்கரை ஆசிா், மாநில தொழிற்சங்க பேரவைத் தலைவா் பரமசிவன், எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஆவின் அண்ணாசாமி, சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் தெய்வநாயகம், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலா் ரஹ்மான், நகர இளைஞா் அணிச் செயலா் மூா்த்தி, நகர நிா்வாகிகள் அய்யப்பன், சங்கரன், முகில், அருணாசலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com