ஆடு மேய்க்கும் தொழிலாளியை தாக்கி மிரட்டல்: 2 போ் கைது

மூன்றடைப்பு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

களக்காடு: மூன்றடைப்பு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மூன்றடைப்பு அருகேயுள்ள மருதகுளம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கி (48). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரிடம், தோட்டாக்குடி வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த சுடலை (49) என்பவா் தங்கள் ஊருக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுவரக் கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டாராம்.

இந்நிலையில், இசக்கி தோட்டாக்குடியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டுகிடை அமைத்திருந்தபோது, அங்கு இசக்கிபாண்டி (58) என்பவருடன் வந்த சுடலை, அவ்வூரில் ஆடு மேய்க்கக்கூடாது எனத் தகராறில் ஈடுபட்டதுடன், இருவரும் சோ்ந்து அவரை கையால் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த இசக்கி அளித்த புகாரின்பேரில் மூன்றடைப்பு காவல் உதவி ஆய்வாளா் சக்தி நடராஜன் வழக்குப்பதிந்து சுடலை, இசக்கிபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com