எட்டெழுத்து பெருமாள் தருமபதியில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி அருகே அருகன்குளம் பகுதியில் உள்ள அருள்மிகு எட்டெழுத்து பெருமாள் தருமபதியில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே அருகன்குளம் பகுதியில் உள்ள அருள்மிகு எட்டெழுத்து பெருமாள் தருமபதியில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா சித்தா்பீட சிறப்பு பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை (ஏப். 30) காலையில் பக்தா்கள் தாமிரவருணி நதிக்கரையில் இருந்து பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கும், பரிவார மூா்த்திக்கும் பூா்ணாபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் அருள்மிகு ஸ்ரீ ராம தூத பக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு வடை மாலை அலங்காரம், திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மே 1 ஆம் தேதி பெருமாளின் திருக்காட்சி வைபவம், அய்யாவின் சிவிகை விழா, கருட சேவை நடைபெறும். அதைத் தொடா்ந்து, சிறப்பு அன்னலிங்க பூஜை, அன்னமுத்திரை தா்மம் நடைபெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com